நெதர்லாந்து இடதுசாரி கட்சித் தலைவர் கிரீட் வில்டர்ஸ் தலைக்கு விலை நிர்ணயித்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லதீப்-க்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் குறித்த கேலிச்சித்திர போட்டிக்கு வில்டர்ஸ் அழைப்பு விடுத்ததை அடுத்து அவரது தலைக்கு பாகிஸ்தான் ரூபாய் 30 லட்சம் வழங்குவதாக கடந்த 2018 ம் ஆண்டு காலித் லதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து காலித் லதீப் மீது நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது இந்த வழக்கில் லதீபுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் சட்டம் நடைமுறையில் இல்லாததை அடுத்து காலித் லதீப் மீதான தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
37 வயதான காலித் லதீப் பாகிஸ்தானில் உள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை அவர் நேரில் ஆஜராகவில்லை.
2010 ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் விளாயாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த காலித் லதீப் பெட்டிங்கில் ஈடுபட்டதை அடுத்து 2017 ம் ஆண்டு அணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.