டில்லி

டில்லியில் ஜி 20 மாநாடு நடைபெறும் போது ஜமா மசூதி பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள்தாக எழுந்த தகவலால் பரபரப்பு ஏற்ப்ட்டது.

Jama Masjid

இன்றும் நாளையும் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதிகளில், பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் மூலம் வான்வழி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஜி 20 உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தவிரப் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.  கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி ஜி-20 உச்சி மாநாட்டுக்கான தலைமையை இந்தியா முறைப்படி ஏற்ற பின்பு, நாடு முழுவதும் 60 நகரங்களில் ஜி-20 தொடர்புடைய 200 கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இன்று டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் சூழலில், காவல்துறையினருக்கு  திடீரென தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் ஜமா மசூதி பகுதியில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது.,

காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளூர் காவல்துறையினர் மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படை உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்குச் சென்றனர். சோதனையில், எதுவும் கண்டறியப்படவில்லை .

அப்பகுதியில் பை ஒன்று நீண்டநேரம் கவனிக்கப்படாமல் கிடந்துள்ளது.  அதைப் பார்த்த நபர் ஒருவர் போலீசுக்கு அழைப்பு விடுத்து, பையில் வெடிகுண்டு இருக்கக் கூடும் என தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து நடந்த சோதனையில் அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது.