சென்னை: எம்.ஜி.ஆர். கழக நிறுவனர்  மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர், திரைப்பட தயாரிப்பாளர்  ஆர்.எம். வீரப்பனுக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி,  அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்    நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

திராவிட இயக்க மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர். கழக கட்சியின் நிறுவனரும் முன்னாள்  அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று  98-வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  அவரின்  பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்குத் தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் ஆர்.எம். வீரப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மதிப்பும், அன்பும் கொண்டவருமான அண்ணன் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்! நம் பாசத்திற்குரிய ஆர்.எம்.வீ. அவர்கள் நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்! என குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]