டெல்லி: உ.பி. உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.
உத்தரகண்டில் உள்ள பாகேஷ்வர், உத்தரபிரதேசத்தின் கோசி, கேரளாவின் புதுப்பள்ளி, மேற்கு வங்கத்தின் துப்குரி, ஜார்கண்டின் தும்ரி, திரிபுராவின் போக்ஸாநகர் மற்றும் தன்பூர் ஆகிய ஏழு தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
ஆறு மாநிலங்களைச் சேர்ந்த கோசி – உத்தரப் பிரதேசம், டும்ரி – ஜார்கண்ட், தன்பூர் மற்றும் போக்ஸாநகர் – திரிபுரா, பாகேஷ்வர் – உத்தரகாண்ட், துப்குரி – மேற்கு வங்காளம், புதுப்பள்ளி – கேரளா ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று கலாலை 10 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, திரிபுராவில் பாஜக முன்னிலை, உ.பி.யில் சமாஜவாதி முன்னிலை, உத்தரகண்டில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அதுபோல ராஜஸ்தான், கேரளாவிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த இடைத்தேர்தலானது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக களம் இறங்கியிருக்கும் எதிர்கட்சியான கூட்டணியான இந்திய கூட்டணிக்கு குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னதாக இந்த முடிவுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.