லக்னோ: 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை என்ஐஏ ரெய்டு மூலம் பாஜக பயமுறுத்துகிறது என்றும், உ.பி.யில் சமூக ஆர்வலர்கள் மீது என்ஐஏ ரெய்டு நடத்தியதற்கு, அம்மாநில வழக்கறிஞர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
நக்சல் தொடர்பான வழக்கில் உ.பி. மாநிலத்தின் பிரயாக்ராஜ், வாரணாசி, சந்தோலி, அசம்கர் மற்றும் தியோரியா மாவட்டங்களில் என்ஐஏ விசாரணை குழுக்கள் செப்டம்பர் 5ந்தேதி அதிகாலையில் சோதனை நடத்தின. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதுபோல, ஆகஸ்டு 1ந்தி லண்டனில் இந்திய தூதரகத்தின் மீது சீக்கிய பயங்கரவா அமைப்பினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்த, 31 தளங்களில் என்ஐஏ சோதனை நடத்தி, குற்றவியல் தரவுகளைக் கைப்பற்றியது அப்போது, தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்பட பல சமூக ஆர்வலர்கள் உள்பட பல அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினார்.
அப்போது, அங்கு செயல்பட்டு வந்த கல்சா எய்ட் என்ஜிஓவின் வளாகங்களில் சோதனை நடத்தினர். கல்சா எய்ட் நிர்வாக இயக்குனர் அமர்பிரீத் சிங்கின் தவக்லி மோரில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர். மேலும், இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்பான ஆவணங்கள், கோப்புகள் மற்றும் என்ஜிஓவின் பாட்டியாலா பொறுப்பாளரின் மொபைல் போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து, ஹோஷியார்பூரில் பண்ணை தலைவர், ஆசிரியர் வீடுகளில் சோதனை மற்றும், ஜலந்தரின் என்ஆர்ஐகளின் 2 வீடுகளில் என்ஐஏ சோதனை நடைபெற்றது. மேலும், மற்றொரு என்ஐஏ குழு ரிஷி காலனியில் உள்ள என்ஜிஓ அலுவலகத்தில் சோதனை செய்து சில ஆவணங்களை பறிமுதல் செய்தது. மற்றொரு குழுவினர், மொஹாலியில் KTF இன் பரம்ஜித் பம்மாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது மொஹாலியில் உள்ள காலிஸ்தான் புலிப் படையைச் சேர்ந்த பரம்ஜித் பம்மாவின் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தியது. அவரது பெற்றோர் தங்கியுள்ள வீட்டில் 2 மணி நேரம் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.
சோதனைக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதிகாரிகள் அமர்பிரீத்திடம் பணத்தின் ஆதாரம் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய அமைப்புகள் குறித்தும் விசாரித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, அமர்பிரித், ஆகஸ்ட் 3 ஆம் தேதி டெல்லியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்திற்கு வர சம்மன் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமர்ப்ரீத், தனது தன்னார்வ தொண்டு நிறுவனம் மக்களை மீட்பதற்காகவும் மறுவாழ்வுக்காகவும் பணியாற்றி வருவதாக தெரிவித்தவர், “எங்கள் நிதி, நன்கொடையாளர்கள் மற்றும் எங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் என்னிடம் கேள்விகளைக் கேட்டனர். எனது கைப்பேசியை கைப்பற்றி மேலும் சில ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை, அவர்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தருகிறேன். இன்றும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன்,” என்று அவர் கூறினார்.
அதுபோல, தாங்கள் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். வெள்ளம் காரணமாக நாங்கள் பிஸியாக இருக்கும்போது ரெய்டுகளின் நேரத்தைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன், ”என்று அவர் கூறினார்.
அதுபோல, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் பிரபல ஹிந்தி இதழான தஸ்தக்கின் ஆசிரியரும், சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான சீமா ஆசாத்தின் வீட்டில் NIA குழு சோதனை நடத்தியது. இன்குலாபி சத்ரா மோர்ச்சா தலைவர் ரித்தேஷ் வித்யார்த்தி மற்றும் அவரது மனைவி சோனி ஆசாத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 5ந்தேதி அன்று பிரயாக்ராஜில், சீமா ஆசாத்துடன் ஒரு பெண் போலீஸ் அதிகாரி, அவரது இல்லத்தில் ரெய்டுக்காக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்தியது. அதைத்தொடர்ந்து, அலகாபாத், அசம்கர், வாரணாசி மற்றும் சந்துவாலி உள்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலையில் சோதனைகள் தொடங்கியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பல இடங்களில் சோதனை நடத்தியதில், குறைந்தது நான்கு பேரையாவது கைது செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து கூறிய பெயரிடப்படாத போலீஸ் அதிகாரி ஒருவர், மாவோயிஸ்ட் தொடர்புகளால் தேடுதல்கள் தூண்டப்பட்டதாகவும், “தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக நிறுவனங் களை இழிவுபடுத்துவதற்கு” சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகவும் கூறினார்.
ஆனால், என்ஐஏ நடவடிக்கையானது, 2024 தேர்தலுக்கு முன்னதாக மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டாம் என்று குடிமக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகத் தோன்றுகிறது என்று ரெய்டு செய்யப்பட்ட சில ஆர்வலர்களின் வழக்கறிஞர் கூறினார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் பிரபல ஹிந்தி இதழான தஸ்தக்கின் ஆசிரியரும், சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான சீமா ஆசாத்தின் வீட்டில் NIA குழு சோதனை நடத்தியது. அவரும் அவரது கணவர் விஸ்வவிஜய்யும் வக்கீல்களாக பணியாற்றி வருகின்றனர், 2010 ஆம் ஆண்டு “நாட்டிற்கு எதிராக போர் தொடுத்த” குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக ஜாமீன் வழங்கப்பட்டது. விஸ்வவிஜய் மற்றும் எழுத்தாளர் சீமா ஆகியோர் அவர்களது வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விஸ்வவிஜய் தனது வீட்டு வாசலில் நிருபர்களிடம் கூறியதாவது: என்ஐஏ என்பது சிவில் சுதந்திரம் தொடர்பான பிரச்சனைகளில் குரல் எழுப்புபவர்களை மிரட்டுவதற்கு தவறாக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். முன்னதாக, சட்டவிரோதச் சுரங்கம் மற்றும் விவசாயிகளின் நிலத்தை தேசிய நெடுஞ்சாலைகளுக்காக அரசு வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியது போன்ற பிரச்சனைகளை நாங்கள் எழுப்பியபோது, அவர்களின் சம்மதத்தைப் பெறாமல், போதுமான இழப்பீடு வழங்காமல் நாங்கள் நக்சலைட்கள் என்று முத்திரை குத்தப்பட்டோம்.
மற்றொரு குழு அலகாபாத்தில் உள்ள சீமாவின் மூத்த சகோதரர் மணீஷ் ஆசாத் மற்றும் அவரது மனைவி அமிதா ஷிரீன் வீட்டிற்கு சென்றது. இவர்களும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டனர்.
மூன்றாவது குழு அலகாபாத்தில் உள்ள இன்குலாபி சத்ரா மோர்ச்சா தலைவர் ரித்தேஷ் வித்யார்த்தி மற்றும் அவரது மனைவி சோனி ஆசாத் ஆகியோரின் வீட்டை அடைந்தது. தம்பதியினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இந்த நிலையில், என்ஐஏ ரெய்டுக்கு வழக்கறிஞர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். சமூக ஆர்வலரின் நிறுவனங்கள் மற்றும் என்ஜிஓக்களின் மீதான வழக்குகளை எதிர்த்து போராடும் அலகாபாத்தில் உள்ள வழக்கறிஞர் ராய் கூறும்போது, “என்ஐஏ யாருடைய வீடுகளில் சோதனை நடத்தியதோ அல்லது நடத்துகிறதோ அவர்கள் மிகவும் படித்தவர்கள் மற்றும் மரியாதைக்குரியவர்கள். அவர்கள் வெளிப்படையாக ஜனநாயக விரோதப் பிரச்சினைகளில் கேள்விகளை எழுப்புவார்கள்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை பாஜக பயமுறுத்துகிறது. “ஆளும் ஆட்சியை விமர்சிப்பதைத் தவிர்க்க நடுத்தர வர்க்கத்தை எச்சரிப்பது அரசாங்கத்தின் அடையாள நடவடிக்கையாகும்,” என்று எச்சரித்தார்.