சென்னை
இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகலாம் என எச்சரித்துள்ளது.
இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது சென்னை உட்படப் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வடக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனத் தகவல் தெரிவித்துள்ளது
அதாவது வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி உருவாகி 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையொட்டி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.