திருச்சூர்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 7000க்கும் அதிகமான பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை புரிந்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று திருவாதிரை நடனம் ஆகும்  இந்த நடனம் ஓணம் பண்டிகையின் அங்கமாக நடைபெறுகிறது.  இந்த நடன விழாவில் திரளான பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடிப் பாடலுடன் ஆடலாய் கவனம் ஈர்ப்பார்கள்.

பெண்கள் எண்ணிக்கை அதிகமாக கூடுவதைப் பொறுத்து திருவாதிரை நடனத்தின் பிரமாண்டம் அமையும்.

திருச்சூர் குட்டநெல்லூர் அரசுக்கல்லூரி மைதானத்தில், மாவட்ட அளவிலான ஓணம் கொண்டாட்டமாக, சுமார் 10 ஆயிரம் பெண்களை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்ட திருவாதிரை நடனவிழாவில், 7 ஆயிரத்துக்கும் மேலான பெண்கள் திரண்டு உலக சாதனை படைத்தனர்.

இந்த நடன விழாவைப் பெண்களுக்கான குடும்பஸ்ரீ அமைப்பினர் ஒருங்கிணைத்தனர்.   இந்த விழாவில் 7,027 பெண்கள் பங்கேற்றனர். இதனை கேரள சுற்றுலாத் துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நடன விழா லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய உலக நடன சாதனையில் 6,582 பெண்கள் பங்கேற்று இருந்தனர்.