சென்னை:
நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
Patrikai.com official YouTube Channel