சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாவுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த ஜூன் மாதம் 30ந்தேதியுடன் ஓய்வுபெற்றார் ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை. இவர் 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. எம்எஸ்சி விவசாயம், எம்பிஏ, பிஎச்டி உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர். இவர் பதவியில் இருந்தபோது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தது. எதிர்க்கட்சிகள் சைலேந்திரபாவுவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தன.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற சைலேந்திரபாவுவை தமிழ்நாடு அரசு பணிக்கு தேர்வு செய்யும் டிஎன்பிஎஸ்சி அமைப்பின் தலைவராக நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு க நடவடிக்கை எடுத்தது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு, அது தொடர்பான கோப்புகளை ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
இநத் கோப்புகளுக்கு அனுமதி வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, சைலேந்திரபாபு தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்பினார். அது தொடர்பாக அனுப்பியுள்ள குறிப்பில், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளதுடன், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுள்ளார்.
மேலும், இந்த பதவி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா என அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.