மண்டபம்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மீனவர்களுக்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று மண்டபத்தில் நடந்த மீனவர் நல மாநாட்டில் கலந்துக் கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விசாவில் பல்லாயிரக்கணக்கன்னோர் பங்கு பெற்றனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். கனிமொழி, நவாஸ்கனி, காதர்பாட்சா உள்ளிட்ட ப்லர் கல்ந்துக் கொண்ட இந்த விழாவில் முதல்வ்ர் மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
முதல்வர் தமது உரையில்,
“இந்த மீனவர்கள் நல மாநாட்டில் உங்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
- மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்கான பட்டா வழங்கப்படும்.
- 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக்கடன் வழங்கப்படும்.
- மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அறிவிப்பு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன முக்கியமான அறிவிப்பு. இதனை 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பெற இருக்கிறார்கள். மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரண தொகை வழங்கப்படும்.
- நாட்டுப்படகு மீனவர்கள் ஆயிரம் பேருக்கு, 40 சதவீத மானியத்தில் எந்திரங்கள் வழங்கப்படும்.
- தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்எண்ணெய் அளவானது 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
- மானிய விலையில் வழங்கப்படும் டீசல் அளவை உயர்த்தி வழங்கவேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.
- தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்தும் ஆய்வுப்பணிகளையும் தொடங்கி இருக்கிறோம். பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளையும் தொடங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
- மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
- மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அலகுத் தொகையானது 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
- பல மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது. இது குறித்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருக்கின்ற காரணத்தினால் இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. எனவே இதற்கான கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து உரிய ஒப்புதலை பெற்று தூண்டில் வளைவுகள் தேவைப்படும் இடங்களில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் பணிகளை விரைவில் தொடங்குவோம்.”
என அறிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel