டில்லி

ந்தியாவில் இருந்து செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் தந்து நிலவு சுற்றுப்பாதையில் தனது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

கடந்த மாதம் 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தை நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது.

தற்போது ‘சந்திரயான்-3’ விண்கலம் 40 நாள் பயணமாகப் புவி சுற்று வட்டப்பாதையைக் கடந்து நிலவு சுற்று வட்டப்பாதையின் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் இதனைக் கண்காணித்து வருகின்றனர்.

இப்போது ‘சந்திரயான்-3’ விண்கலம் 100 கிலோ மீட்டர் தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே திட்டமிட்டபடி 23-ந் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் தரையிறங்க இருக்கிறது.

‘சந்திரயான்-3’ விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகப் பிரிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நாளை மாலை 4 மணிக்கு விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட உந்துவிசை கலன் மற்றும் லேண்டர் நிலவில் மேற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது.  விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.