அம்ஹாரா
எத்தியோப்பியா நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

எத்தியோப்பியா நாட்டில் உள்ள அம்ஹாரா பகுதியில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் எத்தியோப்பியாவில் இராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக நடைபெற்றுள்ளதாகவும் இது டிரோன் தாக்குதல் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதையொட்டி மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறப்படும் அனைத்து மோதல் சம்பவங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel