சென்னை

மிழக மீன்வளத்துறை ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை  சென்னைக் கடற்கரைப் பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதித்துள்ளது.

நாடெங்கும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன   இதில் சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் முக் ஸ்டாலின் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.

இந்த விழா சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  இதையொட்டி அரசின் பல்வேறு துறைகளும் பலவித கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அவ்வகையில் சென்னை கடற்கரைப் பகுதிகளில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை மீன்  பிடிக்கத் தடை விதித்து தமிழக மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழக மீனவள்த்துறை உதவி இயக்குநர் இது குறித்து அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்

அந்தக் கடிதத்தில்,

“பாதுகாப்பு காரணங்கள் கருதி, ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று காலை 4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை கரையிலிருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.