தருமபுரி: சாலையில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தருமபுரி உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இந்த நிலையில், மழை மற்றும் காற்று காரணமாக தருமபுரி பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாமல் அதன்மீது மிதித்துக்கொண்டு சென்ற தாய் மக்ன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் சாலையில் நடந்து சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்ததால் அடுத்தடுத்து 3 பேர் பலியாகினர். 3 பேரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனமழை பெய்ததால் மின் கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.