அரை மயக்கத்தில் இருக்கும் பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது என்று கற்பழிப்பு வழக்கில் முன்ஜாமீன் கோரி வழங்கப்பட்ட மனுவை நிராகரித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கல்லூரி மாணவிக்கு கேக் மற்றும் மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பலாத்காரம் செய்ததாக அதே கல்லூரியைச் சேர்ந்த சீனியர் மாணவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் மாணவன் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது.
இதனையடுத்து முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தை நாடிய மாணவனின் மனுவை விசாரித்த நீதிபதி, அரை மயக்க நிலையில் இருந்த மாணவி உடலுறவுக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
அரை மயக்கத்தில் இருக்கும் பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் மாணவி கற்பழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன் மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் மனுதாரர் மீது எஸ்.சி./ எஸ்.டி. வன்கொடுமை சட்டத்திலும் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]