டெல்லி: நாடாளுமன்ற செயலகம் ராகுல்மீதான தகுதிநீக்க உத்தரவை  திரும்பப் பெறப்பட்ட நிலையில், இன்று மதியம் 12மணி அளவில் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள, ராகுல் காந்தி  நாடாளு மன்றத்திற்கு  வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

குஜராத்நீதிமன்றம் ராகுல்காந்தி மீதான வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்ததால், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், 2ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, ராகுல்மீதான தகுதிநீக்கம் உத்தரவை திரும்ப பெற காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் வலியுறுத்தினர். மேலும் அது தொடர்பான கடிததும் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவுபடி, ராகுல்மீதான தகுதிநீக்க உத்தரவை பாராளுமன்ற செயலகம் வாபஸ் பெற்றது. இதை காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதையடுத்து, ராகுல் பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மதியம் 12மணி அளவில்,  மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் ராகுல் காந்தி நாடாளுமன்றம் வருகை தந்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள்  அவருக்கு உற்சாக வரவேற்பு தஅளித்தனர்.  ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்த அங்கு வந்த ராகுல்,  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செய்தார்.

 

வீடியோ, போட்டோ உதவி: நன்றி – ANI