டில்லி
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்த அதே வேகத்தில் மீண்டும் வழக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறி உள்ளார்
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சார சமயத்தில் மோடி என்னும் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதி மன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் அவருக்கு 2 ஆண்டு காலம் சிறைத் தனடனி விதிக்கப்பட்டதால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த தண்டனையைக் குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நேற்று ராகுல் காந்திக்கு விதிக்க 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதிரி சபாநாயகருக்கு ஒரு டிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர்,
“ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை அளித்ததால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றம் அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
எனவே அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர தகுதி உள்ளவர் ஆகிறார்.
எந்த வேகத்தில் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதோ அதே வேகத்தில் பதவியை மீண்டும் வழங்க வேண்டும். இது குறித்து விளக்கம் அளிக்க சபாநாயகர் இன்று எனக்கு நேரம் அளிக்க வேண்டும். ”
என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் சபாநாயகர் ஓம் பிர்லா இது குறித்து மக்களவை செயலாளரை அணுகும்படி அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.