புனே

உடல்நலக்குறைவால் பிரபல ஓவியர் மாருதி புனேவில் இன்று மரணம் அடைந்தார்.

சுமார் 86 வயதாகும் பிரபல ஓவியரான மாருதி  உடல்நலக்குறைவால் புனேவில் இன்று காலமானார். அவர் புதுக்கோட்டையில் பிறந்து, ரங்கநாதன் என்ற பெயரைக் கொண்டவர் ஆவார்,

பத்திரிகைகளில் மாருதி என்ற பெயரில் ஓவியங்களை வரைந்து புகழ்பெற்றார்.   ஓவியர் மாருதி உளியின் ஓசை, பெண் சிங்கம் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்

ஓவியர்.மாருதி தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மாருதியின் மறைவு, ஓவியர்கள் மற்றும் பத்திரிகை வாசகர்களுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.