KARUNANIDHI_2387419f
 
ன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி,  தங்களது கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நடைபெற்று வந்த நேர்காணல் இன்று முடிவடைந்தது. நேர்காணல் முடிந்ததும், அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.   செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளும் அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும்…
செய்தியாளர் :- அனைவரும் எதிர்பார்க்கும் ஒரே கேள்வி, தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி முடிவாகிவிட்டதா?
பதில் :- பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை.
செய்தியாளர் :- தே.மு.தி.க கூட்டணி முடிவாவதில் ஏன் இந்தத் தாமதம்? இழுபறிக்கு என்ன காரணம்? அவர்களுடைய கோரிக்கை என்ன?

பதில் :- இழுபறி எதுவும் கிடையாது. அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை.
செய்தியாளர் :- தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்புகிறீர்களா?
பதில் :- நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது.  திமுகவோடு, தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று இன்னும் நம்புகிறேன். திமுக-தேமுதிக கூட்டணி பழம் நழுவி பாலில் விழும் நிலையில் உள்ளது.
செய்தியாளர் :- தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போது வெளி வரும்?
பதில் :- இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியிடப்படும்.
செய்தியாளர் :- வேறு எந்தக் கட்சிகளுக்காவது கூட்டணியில் சேர அழைப்பு விடுத்திருக்கிறீர்களா?
பதில் :- வேறு எந்த கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை.