டெல்லியில் மழைக்கால நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஆஸ்பிரின், ப்ரூபின், டைக்லோபினாக் உள்ளிட்ட வலி நிவாரணிகளை விற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட தொற்று காய்ச்சல் பரவிவருவதை அடுத்து மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இந்த வகை மாத்திரைகளை விற்க வேண்டாம் என்று மருந்து கடைகளுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வகை மருந்துகள் ரத்த பிளேட்டிலெட்டுகளை மேலும் சிதைக்கக் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.