கீர்த்தி சுரேஷின் பலநாள் கனவு விரைவில் நிறைவேறப் போவதாக கூறப்படுகிறது.
ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய கையோடு அடுத்ததாக வருண் தவானை வைத்து மற்றொரு இந்திப்படத்தை இயக்கவுள்ளார் அட்லி.
அட்லியின் மனைவி ப்ரியா அட்லி மற்றும் முராத் கேத்தானி இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதில் ஒரு கதாநாயகியாக முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்தியாவின் முன்னனி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் முத்திரைபதிக்க சரியான சான்சுக்காக காத்திருந்த நிலையில் அட்லி மூலம் அவரது கனவு நிறைவேறவுள்ளது.
வருண் தவானின் 18வது படம் என்பதால் VD18 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படம் தமிழில் விஜய் நடித்த தெறி படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது.
காட்சிக்கு காட்சி அப்படியே இல்லாமல் இந்திக்கு ஏற்ப சில மாறுதல்களை செய்ய இருப்பதாக தெரிகிறது.