தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் வில்லனாக நடிக்கும் நடிகர்களில் புஷ்பா படத்திற்காக பகத் பாசில் வாங்கிய 6 கோடி ரூபாய் தான் அதிக தொகை என்று கூறப்படுகிறது.
தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து வரும் பிரகாஷ் ராஜ்க்கு 1 முதல் 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
கதாநாயகனாக அசத்தி வரும் பிரபலங்களும் சில படங்களில் வில்லனாக நடிப்பது உண்டு அந்த வகையில் ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக நடித்த சைப் அலி கானுக்கு ரூ. 10 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
டைகர்-3 படத்தில் வில்லனாக நடித்த எம்ரான் ஹஸ்மி-க்கும் இதேபோல் 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.
பிரான், அம்ரிஷ் பூரி என்று இந்தி திரைப்பட ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த வில்லன்களை விட கதாநாயகனாக இருந்து வில்லனாக அவதாரம் எடுத்துள்ள நடிகர்களுக்கு அதிக சம்பளம் தரப்படுகிறது.
ஷாருக் கான் நடிப்பில் ஜவான் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு 21 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாக இருக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் உலக நாயகனுக்கு 25 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ப்ராஜெக்ட் கே (Project K) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் கமலஹாசனுக்கு வில்லன் கதாபாத்திரத்துக்கு இதுவரை இல்லாத அளவு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளது.
கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு அந்த படத்தில் 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.