ர்பூர்

த்தரப்பிரதேச மாநிலம் ஹர்பூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்கப்படுகிறது.

தற்போது தக்காளி விளைச்சல் குறைவால் வரத்து அடியோடு குறைந்துள்ளது.  இதனால் நாடெங்கும் தக்காளி விலை தாறுமாறாக ஏறி உள்ளது.  நாடெங்கும் தக்காளி விலை உயர்வால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

தற்போது அகில இந்திய அளவில் தக்காளியில் சராசரி விலை ரூ.117 ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.  அதே வேளையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்பூர் நகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்கப்படுவதால் இப்பகுதி மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

தக்காளி விலையேற்றத்தால் அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக டெல்லி, பாட்னா, லக்னோ போன்ற நகரங்களில் ஒரு கிலோ தக்காளியை ரூ.90-க்கு மத்திய அரசு விற்பனை செய்கிறது..  தமிழக அரசு அமுதம் அங்காடிகளில் கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்து வருகிறது.

[youtube-feed feed=1]