நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கட்சி மற்றும் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
மோடி குடும்பப்பெயர் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள ராகுல் காந்தி, “மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்க உள்ளது, இடைக்கால நிவாரணம் கிடைக்காததால், அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டு 112 நாட்கள் ஆகிவிட்டதால், வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.
கட்சி மற்றும் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு அளித்துள்ளார்.