திருச்சி: கரூர் அருகே அரசு பள்ளி ஒன்றின் குடிநீர் தொட்டியில் பினாயில் கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூர செயலை அரங்கேற்றிய 3 பள்ளி சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கரூரில் அருகே உள்ள வீரணாம்பட்டி பகுதியில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு குடிநீர் வழங்க, பிளாக்கிலான குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் ஏதோ மர்ம பொருள் கலந்துள்ளனர். அடுத்த நாள் பள்ளிக்கு வந்த மாணக்கர்கள், குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்து குடித்தபோது, அதில் இருந்து கெமிக்கல் வாடை வந்துள்ளது. இதுகுறித்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் தண்ணீரை ஆய்வு செய்ததில், அதில் கெமிக்கல் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பான உடனடியாக ஆசிரியர்கள் காவல்துறையினர் கவனத்துக்கு கொண்டனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறார்களிடம் விசாரணை மேற்கொண்டதில், விளையாட்டுத்தனமாக பினாயிலை குடிநீர் தொட்டியில் ஊற்றியதாக தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேங்கைவயல் பகுதி குடிநீர் தொட்டியில் மலர் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் பிடிக்கப்படாத நிலையில், தற்போது 4 மாணவர்களிடம் டிஎன்ஏ சோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பள்ளி குடிநீர் தொட்டியில் பினாயில் கலக்கப்பட்ட விவகாரமும் சூடுபிடித்துள்ளது.