வாஷிங்டன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப் பாடகி மடோனோ உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கப் பாப் பாடகி மடோனா பாப் இசை உலகின் ராணி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஆவார். இவர் இதுவரை. ஏழு முறை கிராமி விருது வென்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின்.உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ஆவார்
மடோனா இசைத்துறையில் ஈடுபட்டு 40 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக ‘செலிப்ரேஷன் டூர்’ என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள 45 நகரங்களில் இசைக் கச்சேரிகள் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்டார். இதனா;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மடோனாவிற்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மடோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியில்லாததால் அவர் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் மற்றும் பிற வணிகப் பொறுப்புகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.
மடோனா தீவிர சிகிச்சைக்குப் பிறகு மடோனாவின் உடல்நிலை தேறிய நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் வீட்டில் இருந்தபடி மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]