உன்னோவா
உத்தரப்பிரதேசத்தில் ஒரு காவல்துறை அதிகாரி குடும்பத்தோடு ரூ.500 கட்டுகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சிக்கலில் மாட்டி உள்ளார்.

பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநிலம் உன்னாவோவில் காவல் அதிகாரியாக பணியாற்றுபவர் ரமேஷ் சந்திர சஹானி. காவல் நிலைய பொறுப்பாளராக பணியாற்று வரும் இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியே இவருக்கு எதிராக மாறியுள்ளது.
அவர் அந்த செல்ஃபியில், தனது வீட்டில் கட்டிலில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் சூழ உட்கார்ந்து கொண்டு, நடுவில் 500 ரூபாய்த் தாள்களை பரப்பிவைத்துள்ளார் இணையத்தில் இந்த படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதும் உ.பி காவல்துறை உயரதிகாரி உடனடியாக இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். ரமேஷ் சந்திர சஹானி இது குறித்து,
“நான் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி என் குடும்ப சொத்தை விற்றேன். அப்போது கிடைத்த ரூ.14 லட்சத்துடன் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. அது முறைகேடாகச் சம்பாதித்த பணம் இல்லை”
என்று தெரிவித்துள்ளார்.
ஆயினும் காவல் நிலைய பொறுப்பாளரான ரமேஷ் சந்திர சஹானி வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காவல்துறை உயரதிகாரி ஒருவர்,
“காவல் நிலைய அதிகாரி ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த் புகைப்படத்தில் காவல் அதிகாரி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பதை காட்டுகிறது. இதையொட்டி விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த காவல் அதிகாரி வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்”
எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]