புதுடெல்லி:
ருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த்தாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2 மாத காலத்தில் விசாரித்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அமாலாக்கத்துறை கடந்த வாரம் செந்தில் பாலாஜி இல்லத்தில் சோதனை மேற்கொண்டு அவரை கைது செய்தது.

அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆஞ்சியோ செய்ததில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனைக்கு செல்ல செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனையடுத்து இன்று செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இந்தநிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி தந்ததை எதிர்த்தும், மருத்துவமனைக்கு வெளியே அழைத்து செல்லக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. அப்போது அமலாக்கத்துறையின் மனுவை விசாரிக்கும்போது, தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது சரியானது தான் என தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவில் சந்தேகப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என கருத்து தெரிவித்தனர்.

செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்குமாறு அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் ஆட்கொணர்வு மனுக்களை கையாள்வதில் உயர்நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுவதாக கருத்து தெரிவித்தனர். செந்தில் பாலாஜி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் முடிவு எடுத்ததாக கருதுவதாக கூறினர். தற்போதைய நிலையில், உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர்வது தான் சரியாக இருக்கும் என தெரிவித்த நீதிபதிகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.