சென்னை

மிழக பள்ளிகள் திறப்பு 12ஆம் தேதி அன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

.

தமிழகம் முழுவதும் புதிய கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்களைத் திறப்பதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து வருகிறது.  விடுமுறைக்குப் பின்னர், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும்,  6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு கடந்த மாதம் இறுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளி வைக்க முடிவு செய்தது. எனவே 1 முதல் பிளஸ்-2 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 7-ந் தேதி (நாளை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

கோடை விடுமுறையைக் கொண்டாடக் குழந்தைகளுடன் வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்பி குழந்தைகளுக்குத் தேவையான பள்ளி சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை வாங்குவதில் பெற்றோர் தீவிரமாக இருந்தனர்.

ஆனால் வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. கத்தரி வெய்யில் விடை பெற்ற போதிலும் வெயிலின் கோரத்தாண்டவம் மட்டும் குறையாமல் நாளுக்குநாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நேற்று பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளி வைப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை, பள்ளிக்கல்வித்து றை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர்.

சந்திப்பைத் தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம்.

“வெயில் தாக்கம் இன்னும் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை மேலும் தள்ளிவைப்பது என்று முதல்-அமைச்சருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1 முதல் 5 வரையிலான வகுப்புகளை ஜூன் 14-ந் தேதி திறப்பது என்றும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ந் தேதியும் பள்ளிகளைத் திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.