சென்னை
டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ப்ஞ்சாப் முதல்வருடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்.

அண்மையில் தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் திரவுபதி பிறப்பித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தேசிய தலைநகர் பிரதேச diல்லி அரசு சட்டத்தை திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளைக் கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டில்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது.
இந்தத் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு டில்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்துக்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க வேண்டும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஆதரவு கோரி பல்வேறு மாநில முதல்வர்களையும் அவர் சந்தித்திருந்தார்.
மத்திய அரசின் அவசரச் சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மானும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.
[youtube-feed feed=1]