பெங்களூரு:

ர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உதவி தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கர்நாடகா மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்தியது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் பெரும்பான்மை பலத்துடன் பிரம்மாண்ட வெற்றிபெற்றது.

இங்கு முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பதவியேற்றனர்.

கர்நாடக தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் சுனில் கனுகோலு. இவர் பிரசாந்த் கிஷோரைப் போன்றே தேர்தல் வியூக நிறுவனத்தை நடத்தி வந்த பல்வேறு மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் உட்பட பல்வேறு முடிவுகளை எடுப்பதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் ஆவார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறார் சுனில் கனுகோலு.

இதையொட்டிமுதல்வரின் தலைமை ஆலோசகராக சுனிலை நியமனம் செய்து இருக்கிறார் சித்தராமையா.  மாநில கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்துடன் சுனிலை தன்னுடைய ஆலோசகராக சித்தராமையா நியமனம் செய்து உள்ளார்.