ஈரோடு:
ரோட்டில் இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காக சாலையில் குளித்தவருக்கு போக்குவரத்து காவல்துறை ரூ. 3500 அபராதம் விதித்தது.

வெயில் காலத்திற்கு இடையில் தமிழ்நாட்டில் சாலையில் இளைஞர்கள் புதிய பழக்கம் ஒன்றை கடைபிடிக்க தொடங்கி உள்ளனர். அதன்படி சாலையில் பைக்கில் பக்கெட் முழுக்க தண்ணீருடன் செல்லும் அவர்கள் அதை அப்படியே ரோட்டில் தங்கள் ஊற்றி குளிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ரீல் போடவும், லைக்ஸ் வாங்கவும்,. இணையத்தில் பிரபலமாகவும் இப்படி அவர்கள் செய்கின்றனர். இது மிகவும் தவறாகும். சமீபத்தில் தஞ்சையில் இப்படி செய்த 2 பேருக்கு தலா 4 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.

சாலையில் பைக்கில் பக்கெட் முழுக்க தண்ணீருடன் சென்று அதை தலையில் ஊற்றி குளித்த இளைஞருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காக சாலையில் குளித்தவருக்கு 3500 ரூபாய் அபராதம் விதித்தது போக்குவரத்து காவல்துறை. பார்த்திபன் என்ற நபருக்கு அபராதம் விதித்ததோடு போலீசார் சார்பாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.