பெங்களூரு

 ன்று கர்நாடகாவில் 24 பேர் அமைச்சராகப் பதவி ஏற்க உள்ளனர்.

நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையொட்டி கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுடன் 8 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வந்த நிலையில், இன்று புதிதாக 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். இதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.

தவிர மகாதேவப்பா, எச்.கே.பாட்டீல், மது பங்காரப்பா, உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்  இன்று காலை சுமார் 11.15 மணிக்கு இந்த 24 பேரும் கர்நாடக ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.

 

[youtube-feed feed=1]