சென்னை

பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கட் எடுக்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை. இவர்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். தற்போது இதை 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு போக்குவரத்து மானிய கோரிக்கையின்போது சில முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்று அரசு பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்குக் கட்டணம் இன்றி பயணம் செய்யும் அறிவிப்பாகும்.

இதனடிப்படையில் தற்போது தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதில்

”5 வயதில் இருந்து 12 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் முழு கட்டணத்தில் அரை கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட வேண்டும். அதேபோல் 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அதேநேரத்தில் நகர மற்றும் மாநகர போக்குவரத்துக் கழக சேவையில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூலிக்கலாம்.”

எனத் திருத்தப்பட்டு உள்ளன.