டில்லி

கோ என்னும் செங்கற்களால் நாடாளுமன்றம் கட்டப்படவில்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

வரும் ஞாயிறு அன்று புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவினைப் புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன.  இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர்,

“புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைக்கவில்லை என்றாலோ அல்லது அந்த நிகழ்வுக்கு அவரை அழைக்கவில்லை என்றாலோ அது நாட்டின் மிக உயர்வான அரசியலமைப்பு பதவிக்கான அவமானமாகும்.   நாடாளுமன்றம் என்பது ஈகோ என்னும் செங்கற்களால் கட்டப்படவில்லை, மாறாக அரசியலைப்பு விழுமியங்களால் அது கட்டப்பட்டது”

என்று இந்தியில் தெரிவித்துள்ளார்.