சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர். தருமபுரி நீதிமன்றத்தில் காலை 10 மணியளவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்கல் செய்யப்படும் முதல் குற்றப்பத்திரிகை இதுவாகும்.
Patrikai.com official YouTube Channel