டில்லி
வரும் ஜூலை முதல் வெளிநாடுகளில் கிரெடிட் அட்டை பயன்படுத்தினால் 20% வரி செலுத்த வேண்டும்.
நேற்று முன் தினம் நள்ளிரவில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் விதிகளை திருத்தியது. இதன் விளைவாக, சர்வதேச கிரெடிட் கார்டுகளின் செலவின வரி ஜூலை 1 முதல் 5% இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது., இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இது செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதிக மதிப்புள்ள வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க உதவுவதே இந்த நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்றாகும். என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து செய்தித்தாள்கள், பத்திரி கைகள் அல்லது இணையத்தில் சந்தா சேவைகள் போன்ற வெளிநாட்டுப் பொருட்கள்/சேவைகளை வாங்குவதற்கான கட்டணங்களில் மாற்றங்கள் பொருந்தாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..
இந்த வரி உயர்வினால் வெளிநாட்டில் ஒருவர் கிரெடிட் அட்டை மூலம் ரூ.2.5 லட்சம் செலவு செய்தால் வரி 20% உடன் சேர்ந்து ரூ. 3 லட்சம் செலுத்த வேண்டி வரும். இதைத் தவிர சில வங்கிகளில் கூடுதலாக ஃபாரெக்ஸ், ஜி எஸ் டி போன்ற வரிகளும் விதிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.