சென்னை:
ஜூலை முதல் வாரத்தில் திமுகவின் 2வது சொத்து பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்செய்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூலை முதல் வாரத்தில் திமுகவின் 2வது சொத்து பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
அமைச்சரவை மாற்றம் – அண்ணாமலை விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் நேற்று அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாக பால்வளத்துறை குறிப்பாக ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் விடுவிக்கப்பட்டு மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாகவே ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பால் விலையை குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.