சென்னை:
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவிக்கு தங்க பேனாவை கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
தமிழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழக வரலாற்றுச் சாதனையாக திண்டுக்கல் மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று 600 க்கு 600 தமிழகத்தின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
மாணவியை பாராட்டும் விதமாக கவிஞர் வைரமுத்து மாணவியின் வீட்டிற்கு நேரில் வந்து மாணவியை பாராட்டி தங்க பேனாவை பரிசாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோற்றுப்போன மாணவர்களை தத்தெடுத்து அறப்படுத்தி கல்வி ஊட்டி அவர்களையும் வெற்றி பட்டியலில் சேர்ப்பதற்கு நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும். தற்போது தோல்வியுற்ற மாணவர்கள் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்படும் என்று கூறினார்.