சென்னை

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் ஹுண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இடப்படுகிறது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து மாநிலத்தின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதில் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டில் மின்சாரக் கார் உற்பத்திக்காகக் கூடுதலாக 15,000 கோடி முதல் 20,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இன்று இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகிறது. இந்த திட்டத்தினால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேலும் மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கும், அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரையிலான முதலீடுகள் விரிவுபடுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.