மதுரை:
மதுரையில் சித்திரை திருவிழா முடிந்து கள்ளழகர், அழகர் மலைக்கு திரும்பும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அழகர் மதுரை வரும்போது எப்படி எதிர்கொண்டு அழைக்கின்றனரோ அதேபோல அவர் மலைக்கு திரும்பும் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழியனுப்புவது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இன்று, கால அவர் அழகர் மலை சென்றடைந்தார். அதையடுத்து அழகருக்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் அழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
இனிமேல் அடுத்த வரும் சித்திரை விழாவின்போதுதான் கள்ளழகர் மதுரை வருவார்.
Patrikai.com official YouTube Channel