சென்னை

மிழக அரசிடம் 15 வருடங்களைத் தாண்டி பயன்பாட்டில் இருக்கும் வாகன விவரங்களை அளிக்குமாறு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதைச் செயல்படுத்த அவகாசம் கோரி தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் தேதி, அரசு துறைகளில் உள்ள பழமையான வாகனங்களின் பயன்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் தலை மையில் சென்னையில் நடந்தது.  கூட்டத்தில், அனைத்து துறை சார்ந்த 2-ம் நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  அப்போது வாகனங்களைக் கழிவு செய்வதால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வாகன அழிப்பு கொள்கை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.   இதையொட்டி அனைத்து அரசுத் துறைகளிலும், 15 ஆண்டுகள் கடந்து பயன்பாட்டில் உள்ள வாகன விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு அலுவலர்களிடம் போக்குவரத்து ஆணையர் உத்தரவு இட்டுள்ளார்.