மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது.

மே 1 முதல் 9 வரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மே 1 முதல் 5ம் தேதி வரை மூட உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக நிர்வாகி மனு அளித்துள்ளார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடு்க்க மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.