பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்குனரகம் இன்று அறிவித்துள்ளது.
மே 8 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in / www.dge1.tn.nic.in / www.dge2.tn.nic.in / www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
தவிர மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என்று கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.