மும்பை:
பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 158 ரன்களை சென்னை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

டெல்லி – ராஜஸ்தான் அணிகள் இடையே கவுகாத்தியில் நடந்த போட்டியில் 57 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் குஜராத் – கொல்கத்தா அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பஞ்சாப் – ஹைதராபாத் அணிகளும் மோத உள்ளன.