திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் பங்குனி தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலத்தில் உள்ள மலை மீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்நிலையில், மயிலம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் பங்குனி தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.