புதுடெல்லி:
விடுமுறை நாட்களிலும் வழக்குகளைப் பற்றி சிந்திக்க செலவிடுகிறோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் விடுமுறை நாட்களில் கூட வழக்குகளை பற்றி சிந்திக்கவும், சட்டங்களைப் படிக்கவும் செலவிடுகிறோம் என்றும், காலை 1030 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் 40-60 வழக்குகளை கையாளுகிறோம். இது எங்கள் வேலையின் ஒரு பகுதியே என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பணி நேரத்திற்கு இணையான நேரத்தை அடுத்த நாள் விசாரணைக்கு வரவிருக்கும் வழக்குகளை பற்றி படிக்க
செலவிடுகிறோம் என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel