சென்னை: சைபர் குற்றவாளிகளை கைது செய்த சிவகங்கை போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.
செல்போன் குறுஞ்செய்தி மூலம் இந்தியா முழுவதும் சைபர் மோசடி செய்த புது டெல்லி சைபர் குற்றவாளி சையது ரஹீப் குர்ஷீத் கும்பலை கூண்டோடு கைது செய்து சாதனை படைத்துள்ளது.
இந்திய காவல் துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான குற்றச்செயலில், 22,735 சிம் கார்டுகள், 22 சிம் பாக்ஸ்கள், 11 லேப்டாப்கள், 292 கைப்பேசிகள் மற்றும் 20 கணினிகளை கைப்பற்றப்பட்டு உள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது, சிவகங்கை மாவட்ட தனிப்படை போலீசாசார். இந்த சாதனையை நிகழ்த்திய காவல்துறையினரை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பண வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.