சென்னை: தமிழ்நாடு அரசு, நீதி, வருவாய்த்துறை அதிகாரங்களை காவல் துணை ஆணையர்களுக்கு  வழங்கிய நிலையில், அது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நீதித்துறை, வருவாய்த்துறையில்  நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோர்மீது, துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணைகள் வெளியிட்டது. இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், நீதித்துறை, வருவாய்த்துறையில்  நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோர்மீது, காவல்துறை துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைகள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானவை. நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் இல்லை  என்று கூறியதுடன், தமிழ்நாடு அர7சு  துணை காவல் ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் செல்லாது தெரிவித்துள்ளது.

நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைத்து துணை ஆணையர் பிறப்பித்த ஆணைக்கு எதிராக வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.