சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  இன்று கோவையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, அவர் இன்று கோவை செல்கிறார். இதையொட்டி, இன்று மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து  பல்வேறு மக்கள் நல திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலம் முதலமைச்சரும்,  பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள்,வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று கோவை செல்கிறார். இன்று.காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், திமுக நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

அங்கிருந்து கார் மூலம்  கோவை சின்னியம்பாளையம் செல்லும்  மு.க.ஸ்டாலின், அங்கு  மாற்றுக் கட்சியினர்  திமுகவில் இணையும் விழாவில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்ததாக மாலை 5 மணிக்கு நடக்கும்  பாராட்டு விழா  நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு,. கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் 700 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,  கோவை  கருமத்தம்பட்டியில் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் முதமலைச்சருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று விட்டு இரவு 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இதனிடையே முதலமைச்சர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் இன்று டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.